Home / SNACKS / குபூஸ் / தயிர் பூரி
14 April, 2017

குபூஸ் / தயிர் பூரி

Posted in : SNACKS on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,

குபூஸ்!! அம்மா ஒரு நாள் வீட்டில் தயிர் பூரி என்று எனக்கு எந்த பூரியை செய்து கொடுத்தார்கள் நன்றாக இருந்தது.பின்னர் நான் ஹைதெராபாத் எனது அக்கா வீட்டிற்கு போயிருந்த பொழுது எனது அக்கா குபூஸ் என்ற பெயரில் இதே பூரியை செய்து கொடுத்தாள் 🙂 ..

பெயர் மட்டுமே வேறு சுவை எங்கு சென்றாலும் ஒன்றுதான் .

இப்பொழுது  பல நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த பூரியை செய்தேன்.அதிக இனிப்பு இல்லாமல் ,மாலை நேர தேநீருக்கு சிறந்த காம்பினேஷனாக இருந்தது .சுவையான தயிர் பூரி / குபூஸ் செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :

தயிர் -1/4 கப்.

சர்க்கரை -1/4 கப்

உப்பு – ஒரு சிட்டிகை 

மைதா – 1 கப்

சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு .

செய்முறை :

) ஒரு பாத்திரத்தில் தயிர் , உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும் .

) நுரைவரும்வரை கலக்கவும் ,பின்னர் அத்துடன் சமையல் சோடா சேர்த்து அடிக்கவும் , நன்றாக பொங்கி 3 / 4 கப் அளவிற்கு வரும்.

) இப்பொழுது மைதா சேர்த்து கலக்கவும் .கலவை பசை பக்குவத்தில் இருக்கும்.

) பாத்திரத்தை 6 மணிநேரம் மூடி வைக்கவும்.

) 6 மணிநேரத்திற்கு பிறகு , மாவு பிசு பிசுப்பான மாவு பக்குவத்தில் இருக்கும்.

) மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி , மைதா மாவில் ஒரு முறை புரட்டி எடுத்து வைக்கவும் .

) சமமான இடத்தில சிறிதளவு மைதா தூவி , குபூஸ் உருண்டைகளை ஒன்றொன்றாக அதில் வைத்து தடினமான பூரிகளாக தேய்க்கவும் .

) வாணலியில் எண்ணெய் சூடாக்கி ,தேய்த்த பூரிகளை ஒன்றொன்றாக மிதமான சூட்டில் , பொன்னிறமாக இருபக்கமும் பொல்லும் வரை பொரித்தெடுக்கவும் .

) எண்ணையை வடித்து சூடாக சுவைக்கவும் .

குறிப்பு :

) நல்ல தரமான தயிரை உபயோகிக்கவும் .

) பூரி தேய்க்கும் பொழுது மெதுவாக ,நிதானமாக தேய்க்கவும் .

) வேண்டுமென்றால் சர்க்கரை அளவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *