Home / BREAKFAST AND DINNER SIDEDISHES / சிதம்பரம் கொத்சு
14 July, 2017

சிதம்பரம் கொத்சு

Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,

சிதம்பரம் கொத்சு ! சிதம்பரம் நாராஜப்பெருமாளுக்கு படைக்கப்படும் நெய்வைத்தியங்களில் இந்த கொத்சுவும் , சாம்பார் சாதமும் பிரபலம்.

இந்த கொத்சுவை ,சாம்பார் சாதத்துடன் படைப்பார்கள், அதனால் இந்த கொத்சு சிதம்பரத்தில் மிகவும் பிரபலம் . எனக்கு எப்பொழுதும் சட்னி ,சாம்பார் செய்வதில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் ,எது செய்தாலும் அலுத்துக்கொள்ளும் ,அதனால் ஏதாவது புதிதாக செய்ய தேடிக்கொண்டே இருப்பேன்.

அப்படி தேடும்பொழுது இந்த கொத்சு செய்முறை கிடைத்தது , மிகவும் அருமையாக இருந்ததனால் செய்முறையை உங்களுக்காக எழுதிவைத்தேன்.

சுவையான சிதம்பரம் கொத்சு செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :

பிஞ்சு கத்திரிக்காய் – 10

வெங்காயம் – 1

புளி – கோலியுருண்டை அளவு

மிளகாய் தூள் – 1தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

உப்பு – தேவையானளவு

நல்லெண்ணை – 5தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கொத்து

வறுத்து அரைப்பதற்கு :

சீரகம் – 1 தேக்கரண்டி

முழு மல்லி – 1 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு – 1தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 3 தேக்கரண்டி

வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு துளி .

செய்முறை :

அ) வெங்காயம் , கத்தரிக்காய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஆ) புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து , சாறு எடுத்துக்கொள்ளவும்.

இ) வாணலியில் வறுக்கும் பொருட்களை – சீரகம் , மல்லி , கடலை பருப்பு , மிளகாய் , வெந்தயம் , பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ,பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

ஈ) வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .

உ) பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து , மிதமான சூட்டில் கத்திரிக்காய் நன்றாக வதங்க விடவும் .

எ) கத்திரிக்காய் நன்றாக சுருங்கி , மெதுமெதுப்பாக வதங்கியவுடன் , அரைத்த பொடியை சேர்த்து ஒரு முறை கிளறவும்.

ஏ) பின்பு புளி கரைசல் , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , உப்பு ,1 கப் தண்ணீர் சேர்த்து , மூடி வைத்து ,தொக்கு பதத்திற்கு வரும்வரை வேகவிடவும்.

ஐ) இறுதியாக ஒரு சிறிய வாணலியில் மீதமிருக்கும் 2 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து , கொத்சுடன் சேர்க்கவும்.

ஓ) இட்லி , தோசை , சாதம் என்று தங்கள் விருப்பம் போல் எதனுடனும் பரிமாறலாம்.

குறிப்பு :

அ) நல்லெண்ணை மட்டுமே நன்றாக இருக்கும் அதனால் வேறு எண்ணெய் வேண்டாம்.

ஆ) பிரிட்ஜ்ல் வைத்தால் ஒரு வாரம்வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

இ) வேண்டுமென்றால் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *