Home / CAKES AND BAKES / சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்
28 March, 2017

சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்

Comments : 2 Posted in : CAKES AND BAKES, SNACKS on by : Saranya Arun Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,

சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ் ..இதுவும்  என்னுடைய பேலியோ ஸ்னாக்க்காகும்.

நமது தமிழ் பேலியோவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட கூடாது ஆனால் மற்ற சில பேலியோவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம் .அதனால் நான் எந்த சிப்ஸை சிறிதளவு செய்து வைத்துக்கொள்வேன்.எப்பொழுதாவது மிகவும் பசித்தால் சாப்பிடுவேன் , மற்றபடி குழந்தைதைகளுக்கு மிகவும் நல்லது.நீங்கள்

குழந்தைதைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.

தேவையானவை :

சர்க்கரை வள்ளி கிழங்கு – 2 கப்.

மிளகாய் பொடி – 1 1 / 2 தேக்கரண்டி .

மல்லி பொடி – 1 / 2 தேக்கரண்டி .

கரம் மசாலா – 1 / 4 தேக்கரண்டி .

மிளகு தூள் – 1 / 2 தேக்கரண்டி .

கஸோரி மேத்தி (KASORI METHI)- 1 தேக்கரண்டி .

MIXED HERBS – 1 / 2 தேக்கரண்டி .

வெண்ணை () நெய் – 2 தேக்கரண்டி .

உப்பு தேவையானளவு.

செய்முறை :

) சர்க்கரை வள்ளி கிழங்கின் தோல் சீவி , நீளவாக்கில் மிகவும் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கிழங்கை உப்பு நீரில் போட்டு வைக்கவும் .உப்பு நீர் கிழங்கின் நிறம் மாறாமல் இருக்க உதவும்.

) நீரை வடித்துவிட்டு , கிழங்குடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

) பேக்கிங் டிரேயில் அடுக்கி ஓவெனில் 20 நிமிடம் அல்லது சிப்ஸ் பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

) சுவையான சர்க்கரை வள்ளி சிப்ஸ் தயார் .

) கிழங்கை சீரான அளவில் வெட்டுங்கள். வேகும் பொழுது ஒரே மாதிரியாக வேக உதவும்.           

2s COMMENTS

2 thoughts on : சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்

  • saratha Kanakaraj
    March 29, 2017 at 8:18 pm

    Super taste

  • Saranya Arun
    March 31, 2017 at 9:43 am

    Thank you so much..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *